முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      விளையாட்டு
24-Ram-53

Source: provided

மெல்பார்ன்: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பல மாற்றங்கள்...

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று கடைசி போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து வருகிற 29-ம் தேதி இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹசில்வுட், லெபுசென்... 

அடுத்த மாதம் இறுதியில் ஆஷஸ் தொடர் தொடங்க இருப்பதால் சீனியர் வீரர்களான ஹசில்வுட், லெபுசென் ஆகியோர் அதற்கு தயாராகும் வகையில் கழற்றி விடப்பட்டுள்ளனர். அதன்படி ஹசில்வுட் முதல் 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். லெபுசென் கடைசி ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இடம் பெறவில்லை. மேலும் ஜோஷ் பிலிப் அனைத்து டி20 போட்டிகளிலும் விளையாடுவார். டுவார்ஷுயிஸ் 4,5 போட்டிகளிலும், மஹ்லி பியர்ட்மேன் 3,4,5 டி20 போட்டிகளிலும் சீன் அபோட் முதல் 3 டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணியில் மேக்ஸ்வெல்

டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இணைந்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், முதல் 2 டி20 போட்டிகளில் விளையாடவில்லை. கடைசி 3 போடிகளில் மட்டுமே விளையாட உள்ளார். இது இந்தியாவுக்கு சோக செய்தியாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. எனென்றால் அவர் இந்தியாவுக்கு எதிராக மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து