முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார் விஜய் - வைகோ

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      தமிழகம்
vijay 2025-01-17

Source: provided

சென்னை: காகிதக் கப்பலில் கடல் தாண்ட நினைக்கிறார் விஜய் என்று  வைகோ தெரிவித்தார்.

த.வெ.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றியதை சுட்டிக்காட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொது வாழ்வில் ஆத்திச்சூடியே அறியாதவர் விஜய், கரூர் கொடுந்துயருக்கு முழுக்காரணமான விஜய் பொறுப்பற்று திசை திருப்புகிறார். நடந்த சம்பவத்திற்கு துளியளவும் வருத்தப்படாமல், குற்ற உணர்ச்சியே இல்லாமல் உள்ளார் விஜய். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார் விஜய்.

ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும். தி.மு.க.வை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளிநகையாட முனைகிறார் விஜய். முதலமைச்சர் மீது வெறுப்பையும், கசப்பையும் கொட்டி தீர்த்திருக்கிறார் விஜய். விஜயின் நிலைமை அனுதாபத்திற்கும் பரிதாபத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து