முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டது

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      தமிழகம்
TN-Assembly 2024-12-04

Source: provided

சென்னை: சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சார்பில் புதிய நர்சிங் கல்லூரி அமையவுள்ள இடத்தினை அமைச்சர் சேகர்பாபு நேற்றுமுன்தினம், பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், “நர்சிங் கல்லூரியை தற்காலிகமாக தொடங்கி, 100 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். டாக்டர்.நாராயணபாபுவை பொறுப்பு அலுவலராக நியமித்துள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லாமல் 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளோம். காஞ்சீபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு டிசம்பர் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் எங்களிடம் 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை கேட்டு இருக்கிறார்கள். அதை ஏற்பாடு செய்து, முதற்கட்டமாக 14-ந்தேதி பிஸ்கெட் பாக்கெட்டுகளை அனுப்ப உள்ளோம். பக்தர்களுக்கு 24 மணிநேரமும் உதவிடும் வகையில் சபரிமலையில் ஒரு அலுவலகத்தை எற்படுத்த உள்ளோம். மேலும் அப்பல்லோ, காவிரி, ராமச்சந்திரா ஆஸ்பத்திரிகள் மூலம் அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவ மையத்தை ஏற்படுத்துவதற்கு தேவஸ்தானத்திடம் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைக்கும் நிலையில் போதிய டாக்டர்களுடன் தற்காலிக மருத்துவ மையம் அமைக்கப்படும்.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பஸ்களை இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. தமிழக பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கேரள அரசின் துணையோடு தமிழக அரசு மேற்கொள்ளும்” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து