முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கர் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண் : முதல்வர் விஷ்ணு தியோ சாய் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2025      இந்தியா
Vishnu-Deo-Sai 2023-12-10

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார். 

சத்தீஷ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. அங்கு பஸ்தார் போன்ற பகுதிகள், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் ஆகும். சத்தீஷ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளை சரண் அடையச்செய்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘பூனா மார்கம்’ என்ற திட்டம் அமல்படுதப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபரில் ஒரே நாளில் 210 நக்சலைட்டுகள், தங்களது ஆயுதங்களுடன் போலீஸ் மற்றும் துணை ராணுவப்படை அதிகாரிகள் முன்பு சரண் அடைந்தனர். நக்சல் ஒழிப்பு நடவடிக்கை வரலாற்றில் அதிகம்பேர் சரண் அடைந்த நிகழ்ச்சி இதுதான் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், சத்தீஷ்கரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியபோது ”மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வுக்கான வேலை வாய்ப்பை வழங்கி அதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியின்போது அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.” என்றார். இதன் மூலம் நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மேம்படும் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து