முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.ஏ.செங்கோட்டையனின் கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டர் வைரல்

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      தமிழகம்
Sengottaiyan 2023-04-20

Source: provided

சென்னை : த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையனின் கார்த்தி கை தீப வாழ்த்து போஸ்டரால் சமுகதளத்தில் வைரலானது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 27-ம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு த.வெ.க.வில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவிகள் கொடுக்கப்பட்டன.

இந்த சூழலில் கோபியில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் அவர் வைத்திருந்த பழைய பெயர் பலகை அகற்றப்பட்டு புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது. அதில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் உருவப்படங்களுடன் செங்கோட்டையன் உருவப்படமும் இடம் பெற்றிருந்தது. அதில் த.வெ.க. கொள்கை தலைவர்கள் புகைப்படமும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில்த.வெ.க. மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் மக்களுக்கு கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் வெளியிட்டுள்ளபதிவில், “தீமையின் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்.... அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் உருவப்படங்களுடன் செங்கோட்டையன் உருவப்படமும் இடம் பெற்றிருந்தது. அதில் த.வெ.க. கொள்கை தலைவர்கள் புகைப்படமும், புஸ்சி ஆனந்தின் புகைப்படமும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வாசகமும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தின் புகைபடமும் இடம்பெற்றிருந்தது.செங்கோட்டையனின் இந்த கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து