முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயமான மலேசிய விமானம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு தேடும் பணி வரும் 30-ம் தேதி மீண்டும் தொடக்கம்

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      உலகம்
Malaysia 2023 08 11

Source: provided

கோலாலம்பூர் : 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை மீண்டும் தேடும் பணி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி போயிங் 777 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. மொத்தம் 239 பேர் இருந்த அந்த விமானத்தில், சீன பயணிகளே அதிகளவில் இருந்தனர். விமானம், அதன் பயண பாதையில் இருந்து விலகி, தெற்கு நோக்கி சென்று பின்னர் இந்திய பெருங்கடலின் தெற்கு உள்பகுதிக்கு சென்று மறைந்தது. அது ரேடாரில் இருந்து விலகி சென்றது.

இதனை செயற்கைக்கோள் தரவுகள் தெரிவிக்கின்றன. விமானம் விபத்தில் சிக்கியிருக்க கூடும் என நம்பப்படுகிறது. இதற்கேற்ப, கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரை மற்றும் இந்திய பெருங்கடல் தீவுகளில் விமானங்களின் சில பாகங்கள் கரை ஒதுங்கின. இதனை தொடர்ந்து பல நாடுகளும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டும் அவை தோல்வியிலேயே முடிந்தன. 2018-ம் ஆண்டு ஓசன் இன்பினிட்டி என்ற அமெரிக்காவை சேர்ந்த கடல்சார் ரோபோடிக்ஸ் நிறுவனமும் தேடுதலில் ஈடுபட்டது. எனினும், கடலில் இருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த சூழலில், அந்நிறுவனம் வருகிற 30-ந்தேதி முதல் 55 நாட்களுக்கு ஆழ்கடலுக்குள் சென்று மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளது.

இதனை குறிப்பிட்டு மலேசிய போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த சோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் வகையில் இந்த பணி அமையும் என தெரிவித்து உள்ளது. எனினும், விமானத்தின் பாகங்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் மட்டுமே அந்நிறுவனத்திற்கு ரூ.631 கோடி (70 மில்லியன் டாலர்) சம்பள பணம் கொடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்து உள்ளது. இதனால், 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களை ஆழ்கடலில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து