எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : சஞ்சார் சாதி செயலியால் மத்திய அரசுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் இனி, சஞ்சார் சாதி செயலி கட்டாயம் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் தொலைதொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. தொலைதொடர்பு சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
அதேவேளை, அனைத்து போன்களிலும் சஞ்சார் சாதி செயலியை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமைக்கு விடுக்கும் நேரடி அச்சுறுத்தல். ஒட்டுமொத்தமாக, நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக இந்த அரசு மாற்றி வருகிறது. சைபர் மோசடிகளை தடுக்கும் வசதி அவசியம்தான், ஆனால் இது அந்த வரம்பையும் தாண்டி தனியுரிமையை கடுமையாக மீறுகிறது என்று எதிர்க்கட்சிகள் உள்பட பல தரப்பும் விமர்சனம் செய்தன. இதையடுத்து, சஞ்சார் சாதி செயலி வேண்டாம் என்றால் அதை நீக்கி கொள்ளலாம். செல்போனில் அந்த செயலியை வைத்திருப்பதா? வேண்டாமா? என பயனர்களே முடிவு எடுக்கலாம் என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிதாக உற்பத்தி செல்லப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் செல்போன்களில் சஞ்சார் சாதி செயலியை கட்டாயம் நிறுவ வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பொதுமக்கள் விரும்பினால் செயலியை தாங்களே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கும்போது, ஏன் அதை செல்போன்களில் கட்டாயமாக இணைக்க வேண்டும்? என்று ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், இது தொடர்பாக தங்கள் எதிர்ப்பை அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் மத்திய அரசிடம் பதிவு செய்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


