முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர்களுக்கு புத்தாண்டு விருந்தளித்த ஆஸ்திரேலிய பிரதமர்

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2026
Anthony-Albanese-2026-01-02

சிட்னி, புத்தாண்டை முன்னிட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை நேரில் சந்தித்தார். ஆஸ்திரேலிய பிரதமர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாடிய அவர் புத்தாண்டு விருந்து அளித்தார்.

தொடரை வென்றது...

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

கலந்துரையாடல்...

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை நேரில் சந்தித்தார். ஆஸ்திரேலிய பிரதமர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாடிய அவர் புத்தாண்டு விருந்து அளித்தார். அப்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் ஆண்டனி அல்பானீஸ் உற்சாகமாக கலந்துரையாடினார்.

இளஞ்சிவப்பு கடலாக...

இந்தச் சந்திப்பு பற்றி ஆண்டனி அல்பானீஸ் தனது இன்ஸ்டாகிராமில், இது வேறு எந்தத் தொடரையும் போலல்லாத ஒரு ஆஷஸ் தொடராக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் சிட்னி மைதானம் ஆஸ்திரேலிய ரசிகர்களும் பார்மி ஆர்மியும் மெக்ராத் அறக்கட்டளையின் சிறந்த பணியை ஆதரிக்கும் இளஞ்சிவப்பு கடலாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்குப் போவோம் என பதிவிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து