முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

எலிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு எவ்வளவு என்று தெரியுமா

Image Unavailable

இந்தியாவில் 90 வகை எலிகளும் தமிழகத்தில் 15 வகை எலிகளும் உள்ளன. எனினும் வரப்பெலி எனப்படும் கறம்பை எலி, வெள்ளெலி, புல் எலி மற்றும் சுண்டெலி ஆகியவை பயிர்களை அழிக்கும் முக்கிய இனங்கள். ஆண்டுக்கு 70 முதல் 80 லட்சம் டன் உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதன் மூலம் ரூ.800 கோடி அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.  ஒரு மனிதனுக்குத் தேவையான ஒரு நாள் உணவு தானியத்தை மூன்று ஜோடி எலிகள் ஒரு நாளில் தின்று அழிக்கும் திறனுடையவை. வயல் எலிகள் ஒவ்வொன்றும் தங்கள் வளைகளில் உள்ள உணவு அறைகளில் 3 முதல் 5 கிலோ நெல்மணிகள், ஒரு கிலோ உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை சேமித்து வைப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஒரு ஜோடி எலிகள் ஆண்டுக்கு 2 முதல் 5 தடவையாக ஒவ்வொரு முறையும் 6 – 8 குட்டிகள் ஈனுகின்றன. பிறந்த 45 நாளில் இவையும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். இவற்றின் சராசரி வயது 2 ஆண்டுகள். இதனால் ஒரு ஜோடி எலிகள் ஒரே ஆண்டில் 500 எலிகளாக பெருகுகின்றன. செப்டம்பர், அக்டோபர், ஜனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. நுட்பமான அறிவும், தந்திரமும், புத்திசாலித்தனமும் நிறைந்த இவற்றுக்கு வாசனை, ருசி, கேட்டல் மற்றும் தொடுதல் திறன் அதிகம். வயல் எலிகள் நீரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக நீந்தும். 20 முதல் 25 மீட்டர் நீளமும், ஒன்றிற்கு மேற்பட்ட புறவழிகளும் கொண்ட வளைகளைத் தோண்டுகின்றன. உணவின்றி 7 நாட்களும், நீரின்றி 2 நாட்களும் சமாளிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்