எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'உனக்கென்ன வேணும் சொல்லு
'உனக்கென்ன வேணும் சொல்லு
மொஹ்ர்னா அனிதா ரெட்டி சர்வதேச விளம்பர துறையில் மட்டுமின்றி தியேட்டர் நாடகங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர் தற்போது 'உனக்கென்ன வேணும் சொல்லு ' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறிய படம் என்ற போதிலும் படமாக்கப்பட்ட விதத்திலும், கதை அமைப்பினாலும் எல்லோரையும் கவரும் 'உனக்கென்ன வேணும் சொல்லு' இந்த மாதம் இறுதியல் உலகெங்கும் வெளி வர உள்ளது.
' என்னுடைய கதாபாத்திரம் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய கதாபாத்திரம் இல்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் பாத்திரம் தான் என்றாலும் , இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அந்தக் கதா பாத்திரத்தின் முக்கியத்துவத்தை என்னிடம் விவரிக்கும் போது அந்த பாத்திரத்தின் வீரியத்தை புரிந்துக் கொண்ட நான் அந்த வேடத்தில் நடிக்க போவது யார் என்று அவரிடம் கேட்டு கொண்டே இருந்தேன். கதையை சொல்லி முடித்ததும் தீர்மானமாக சொன்னார் ' நீ தான் என்று'.
சற்றே தயங்கினாலும் அவர் எனக்கு ஊட்டிய தன்னிம்பிக்கை காரணமாக அந்த வேடத்தை ஏற்றுக் கொண்டு நடித்தேன். படப்பிடிப்பு முடிந்து , படம் பார்த்த பின்னர் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. திருமணமாகி குழந்தை பேறு இல்லாமல் தவிக்கும் சமுதாயத்தின் மேல் தட்டில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் பாத்திரத்தில் நடிக்கிறேன்.அந்த பெண்ணுக்கு சமுதாயத்தில் பேறு இல்லாததால் அவளுக்கு நடக்கும் அவமானங்களும் அதன் தொடர்ச்சியாக அவளுடைய செய்கையும் அந்த செய்கையின் வாயிலாக அவள் ஒரு அம்மானுஷ்ய சக்திக்கு உயிர் கொடுத்து இருப்பதும் தான் படத்தின் மைய கரு. சமுதாயத்தில தாய் இல்லா பிள்ளைக்கு கிடைக்கும் அரவணைப்பு , பிள்ளை இல்லா தாய்க்கு கிட்டுவதில்லை. அந்த பிரச்சினை தான் நம் கண்ணுக்கு சமுதாய பிணி என்பேன்.
இந்த படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் , சக நடிக நடிகையர் , இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம், தயாரிப்பாளர் ஷான், மற்றும் 'உனக்கென்ன வேணும் சொல்லு' படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி இருக்கும் ஆரா சினிமாஸ் நிறுவனதார்க்கும் என் மனமார்ந்த நன்றி எனக் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


