முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல்

siddha-1

தொண்டை ரணம் தீர ;-- மாதுளம்பூவை உலர்த்தி பட்டை காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை ரணம் தீரும்.

தொண்டை கட்டு குணமாக ;-- வில்வ இலை பொடி அரை கரண்டி தேனில் சாப்பிட்டு வர தொண்டை கட்டு குணமாகும்.

தொண்டைகரகரப்பு நீங்க ;-- வல்லாரை சாறில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலி பொடியை சாப்பிட்டு வர தொண்டைகரகரப்பு நீங்கும்.

தொண்டைகரகரப்பு நீங்க ;-- மருதாணி இலையை  ஊற வைத்து வாய் கொப்பளிக்க தொண்டைகரகரப்பு நீங்கும்.

தொண்டை புண் குணமாக ;-- சுக்கு,வால்மிளகு, திப்பிலி மற்றும் எலரிசியை வறுத்து தூளாக்கி ஒரு சிட்டிகை பால் அல்லது தேனில் குழைத்து சாப்பிட குணமாகும்.

தொண்டை புண் ஆற ;-- கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டை புண் ஆறும்.

தொண்டை எரிச்சல்  குணமாக;-- காது வலி,தொண்டை எரிச்சலுக்கு கிருஷ்ண துளசி எடுத்து வர குணமாகும்.

குரல் கம்மல் குணமாக ;-- மாற மாவிலையை  கொதிக்க வைத்து நீரை பருகிவர குணமாகும்.

தொண்டை பிரச்சனைகள் தீர ;-- பூவரசன் வேர்,பட்டை கஷாயம் செய்து  வாய் கொப்பளித்து வர .தொண்டை தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

குரல் வளம் உண்டாக ;-- வெற்றிலை வேரை வாயில் போட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்