எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமேனியின் மகன் மோஜ்தபா கமேனியும் கொல்லப்படுவார் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் இணைந்து கடந்த சனிக்கிழமை ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி, பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்பட முக்கியத்துவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர். கமேனி மட்டுமின்றி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், கமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபா கமேனியை புதிய தலைவராக நிபுணர்கள் சபை தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இன்னும் நிபுணர்கள் சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மறைந்த கமேனியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி திடலில் மூன்று நாள்கள் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானின் புதிய உச்ச தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரையும் குறிவைப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளை அச்சுறுத்தவும், ஈரானிய மக்களை ஒடுக்கவும் நினைக்கும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட எந்தவொரு தலைவரும், கொல்வதற்கான ஒரு தெளிவானஇலக்காக இருப்பார். அவரது பெயர் என்ன, அவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது முக்கியமல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


