Idhayam Matrimony

அய்யா வைகுண்டர் 194-வது அவதார நாள்: தமிழ்நாடு கவர்னர் ரவி வாழ்த்து

புதன்கிழமை, 4 மார்ச் 2026      தமிழகம்
RN-Ravi 2023 04 05

சென்னை, அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- அய்யா வைகுண்டர் அவர்களின் 194வது அவதார தினத்தையொட்டி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அய்யா வழி பக்தர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி நமது நாகரிக அடையாளத்தை அழித்து நமது மக்களை அடக்க முயன்ற காலத்தில், விஷ்ணுவின் தெய்வீக அவதாரமான அய்யா வைகுண்டர், தர்மத்தை காக்கவும், சமூக வலிமையை மீட்டெடுக்கவும், சனாதன தர்மத்தின் உணர்வை மீண்டும் தட்டியெழுப்பும் வகையில் அவதரித்தார். 

ஒடுக்குமுறைக்கு சவால் விடுத்து, சமூக பாகுபாட்டை களைந்த அவர் நமது கலாசாரம் மற்றும் தார்மீக அடித்தளங்களை மீண்டும் நிலைப்படுத்தினார்.  அய்யா அவர்கள், உலகளாவிய சகோதரத்துவத்தை ஒளிரச் செய்து சமூகத்தில் சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்தை வளர்த்தெடுத்தார். அவரது வாழ்க்கை மற்றும் போதனைகள் நம்மை ஒரே குடும்பமாக தொடர்ந்து வழிநடத்துவதுடன் வளமான, நீதிசார்ந்த மற்றும் ஆன்மிக ரீதியாக அடித்தளமிடும் வளர்ச்சியடைந்தபாரதத்தை கட்டியெழுப்புவதற்கு உத்வேகம் அளிக்கின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து