முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் மூலம் பாலிசி விற்பனை: எல்.ஐ.சி. திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

கிருஷ்ணகிரி, பிப். - 19 - ஆன்லைன் மூலம் பாலிசி விற்கும் முறையை எல்.ஐ.சி. விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த தகவலை எல்.ஐ.சி தென் மண்டல மேலாளர் சிங் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் ரூ. 63 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட எல்.ஐ.சியின் புதிய அலுவலர் குடியிருப்பை திறந்து வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆயுள் காப்பீட்டு கழகத்தில் விரைவில் இணையத்தில் பாலிசி விற்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆயுள் காப்பீட்டு கழக அலுவலக நடைமுறையை முற்றிலும் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் 51 லட்சம் பாலிசிகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 31 லட்சம் பாலிசிகள் விற்கப்பட்டுள்ளன. காப்பீட்டாளர்களுக்கு 71 சதவீதம் முதிர்வு தொகை வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டாளர்களிடம் இருந்து பிரீமியம் தொகையை வசூலிக்க 20 ஆயிரம் முகவர்களை கொண்ட சேவை மையங்கள் செயல்படுகின்றன. பாலிசிதாரர்கள் யூனிட் பிளஸ் முதலீடு பாலிசிகளை வாங்கும் போது மிகவும் கவனத்தோடு நிபந்தனைகளை படித்த பின் தேர்ந்தெடுப்பது அவசியம். இப்போது நடைமுஹையில் உள்ள ஜீவன் அங்கூர் காப்பீடு பாலிசிதாரர்களை அதிகம் கவர்ந்துள்ளது. ஜீவன் ஆரோக்யா பாலிசி 3 விருதுகளை பெற்றுள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்