முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தர பிரதேச முதல்வருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை,மார்ச்.- 12 - உத்தர பிரதேசத்தில் இம்மாதம் 15 -ந்தேதி முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அகிலேஷ் யாதவ்வை நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினர். இதுபற்றி செய்தி மக்கள் தொடர்புதுறை அறிக்கையில் கூறியுள்ளதால் அண்மையில் நடந்து முடிந்த உத்தரபிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில், முலாயம் சிங் யாதவ் மகன் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, அந்தக் கட்சியின் சட்டமன்றத் தலைவராக, முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அகிலேஷ் யாதவை நேற்று (11.3.2012) தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உத்தரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கும், மாநிலத்தின் மிக இளம் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதற்கும் தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அப்போது அகிலேஷ் யாதவ்  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசீர்வாதம் எப்பொழுதும் தேவை என்று கோரினார். தன்னுடைய nullரண ஆசீர்வாதம் அவருக்கு எப்போதும் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் என்னும் மிகப் பெரிய பொறுப்பை தற்போது அவர் பெற்றுள்ளதாகவும், உத்தரபிரதேச மக்கள் அவரிடம் மிகுந்த எதிர்பார்ப்பினைக் கொண்டுள்ளதாகவும், இறைவனின் ஆசியுடனும், மக்களின் ஒத்துழைப்புடனும், ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பினையும் அவர் nullர்த்தி செய்வார் என்றும் தெரிவித்துக் கொண்டார். இதனையடுத்து, சமாஜ்வாடி கட்சித் தலைவர்  முலாயம் சிங் யாதவ் 15.3.2012 அன்று நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தும்படி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டார். அகிலேஷ் யாதவ் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் பெரிதும் விழைந்தாலும், 18.3.2012 அன்று நடைபெற இருக்கும் சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், தன்னால் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்பதைத் தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், டாக்டர். மு. தம்பிதுரை, எம்.பி., மற்றும் டாக்டர். வா. மைத்ரேயன், எம்.பி., ஆகியோரை பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!