முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 5-ம் தேதி கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண விழா

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மேலூர்,மார்ச்.27 - கள்ளழகர் கோவிலில் வரும் 5 -ம் தேதி திருக்கல்யாண திருவிழா நடக்கிறது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி வரும் 2-ம் தேதி அன்று திருக்கல்யாண திருவிழா அழகர்கோவிலில் தொடங்குகிறது. அன்று சுவாமி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து 3,4 தேதிகளிலும் கோவிலிலே திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தொடர்ந்து 5-ம்தேதி காலை 7 .30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து திருக்கல்யாண சீர்வரிசைகள் யானை மீது வைத்து எடுத்து வரப்படும். பின்னர் அன்று பகல் 11 மணியில் இருந்து 12 மணிக்குள் கள்ளழகர் பெருமாள், ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லித்தாயார், ஆண்டாள் ஆகிய 4  பிராட்டிமார்களையும் மணக்கிறார். திருக்கல்யாண திருக்கோலத்தில் பெருமாள் தேவியர்களுடன் சர்வஅலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்று மாலையில் சுவாமி இருப்பிடம் சேருகிறார். அன்று மதியம் பக்தர்களுக்கு திருக்கல்யாண சாப்பாடு மற்றும் மஞ்சள் கயிறு பிரசாதம் இணைந்த  பொட்டங்களும் வழங்கப்படும். மறுநாள் 6 - தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருக்கல்யாண ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி செல்வராஜ் மற்றும் கோவில்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago