முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுக நிர்வாகிகள் அடிதடி: மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.15  - மதுரையில் திமுக நிர்வாகிகளின் அடிதடியில் மதுரை வந்த மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார். தமிழக முன்னாள் துணைமுதல்வரும். திமுக மாநில பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வுக்காக மதுரை வந்திருந்தார். இந்த நிலையில் அம்பேத்காரின் பிறந்தநாளையொட்டி நேற்று மதுரையில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினர் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் திமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மண்டல தலைவர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகர் செயலாளர் தளபதி சிலைக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்த போது திமுக நிர்வாகிகள் கீழே போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக தயார் நிலையில் நின்றனர். அப்போது மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் எம்எல்ஏ கவுஸ்பாட்சா, இளைஞரணி செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நின்று கொண்டிருந்தனர். அப்போது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வந்த மாவட்ட நிர்வாகிகள்குழந்தைவேலுவை மறைத்து நின்றனர். இதனால் கோபம் அடைந்த குழந்தைவேலு அனைவரையும் தள்ளிவிட்டு  முன்னால் வந்தார்.

   அப்போது முன்னாள் எம்எல்ஏ கவுஸ்பாட்.சாவையும் தள்ளிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கவுஸ்பாட்சா என்னை ஏன் தள்ளிவிடுகிறீர்கள் எனக்கேட்டுக்கொண்டே குழந்தைவேலு அடிக்க பாயந்தார். உடனே குழந்தைவேலும் கவுஸ்பாட்சாவை அடிக்க பாய்ந்தார். இதைபார்த்துக்கொண்டிருந்த மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் திமுகவினர் அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் போட்டோவுக்கு போஸ் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். திமுகவினரின் இந்த அடிதடியால் அந்த இடத்தில் சிறிது நேரம் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. திமுக மாநில பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருக்கும் போது திமுக நிர்வாகிகளின் இந்த அடிதடி கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்