முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் களபாபிஷேகம்

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சபரிமலை, ஏப்.20 - பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு மேஷ விஷூ உற்சவ நெய் அபிஷேகம் நிறைவு செய்யப்பட்டு பகலில் களபாபிஷேகம் நடைபெற்றது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் சித்திரை விஷூ விழாவுக்காக நடை திறக்கப்பட்டு கடந்த 9 நாட்களாக ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். முக்கிய விழாவான மேஷ விஷூ கணி வைபவம் கடந்த 14 ம் தேதி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்து சுவாமி தரிசனம் செய்து கண்டுகை நீட்டப் பிரசாதம் பெற்று சென்றனர். விழாவின் இறுதி நாளான புதன்கிழமையன்று பகல் 12 மணிக்கு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி விழாவை நிறைவு செய்து வைத்தார். 

இதைத் தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஸ்வரரு சோபன மண்டபத்தில் தங்க கலசத்தில் அரைத்து வைத்திருந்த சந்தனத்தை பூஜைகள் செய்து ஐயப்பனுக்கு களபாபிஷேகம் நடத்தினார். அன்று இரவு புஷ்பாபிஷேகம், படிபூஜை முடித்து சுவாமி ஐயப்பனுக்கு புஷ்ப அலங்காரம் செய்து கையில் வில் அம்பு கொடுத்து தவக்கோலத்தில் ஹரிவராஸனம் பாடி மேஷ விஷூ பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்