முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியராணுவ தலைமை தளபதி பதவியில் வி.கே.சிங் நீடிக்கிறார்?

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 21 - ராணுவ தளபதி வி.கே.சிங் மீது சென்னை உயர்நீnullதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராணுவ தளபதி பதவியில் nullநீடிக்க வி.கே.சிங்கிற்கு என்ன தகுதி உள்ளது என லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் விஸ்வமூர்த்தி கோ-வாரண்டோ அடிப்படையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- லஞ்சம் தர வந்தவர்களை பிடித்துக் கொடுக்காமல் டிவிக்கு பேட்டி அளிப்பது சரியானதல்ல என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலேயே நான்கு நட்சத்திர மெடல் அணிந்தவர்களில்  அவரும் ஒருவர். ராணுவ தளபதி என்பது மிக பெரிய அதிகார பதவி இவர் 31-3-2010 ஆண்டு முதல் பதவி வகித்துவருகிறார். முன்னாள் ராணுவ தளபதி தேஜிந்தர்சிங் தன்னை அணுகி, டட்ரா வாகனங்களை வாங்க ஒப்புக் கொண்டார் ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டினார். இந்த தகவலை ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியிடம் வி.கே.சிங் எடுத்து சொல்லியிருந்தார். அப்பொழுது மந்திரி முன்னாள் ராணுவ தளபதி மீது நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தும். வி.கே.சிங் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் முதலை கண்ணீர் வடித்து வருகிறார். ராணுவ தளபதியாக இருப்பவர் ஊடகங்களில் வெளிப்படையாக ராணுவ ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அது ராணுவ பலத்தை வீழ்த்தும் வகையில் குறிப்பிட்டுள்ளார். இந்திய ராணுவத்தில் வெடி மருந்துகள் குறைவாக உள்ளது. அயுத எண்ணிக்கை குறைந்துள்ளது. பீரங்கி தோட்டாக்கள்  கிடையாது. இந்த நேரத்தில் அண்டை நாட்டவர்கள் தாக்கினால் என்ன செய்வது என்பது போன்ற இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்  செய்தி  வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவ தொழில் நுட்ப விதிகளை மிறியுள்ளார். மேலும் டெல்லியில் மாநாடு நடைபெற்ற போது. இந்திய ரானுவம் தலை நகரை நோக்கி முன்னேறியது. 10 என தெரிவித்து இந்தியாவை ஒரு சலசலப்புக்கு ஆளாக காரணம் மானவர். இவ்வாறு செய்தவர் எதன் அடிப்படையில் எந்த தகுதியில் இன்னும் ராணுவ தலைமை தளபதி பதவியில் நீடிக்கிறார். இவரை இந்திய குடியரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஏலிபி தர்மாராவ் மற்றும் நீதிபதி பழனிவேலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி - இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு வரும் திங்கள்கிழமை 23-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்