முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் குண்டுவெடிப்பு: கமிஷனர் விளக்கம்

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.28 - சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குடியிருப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 2 பேரில் கை, விரல்கள் துண்டானது. சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் பழமை வாய்ந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் கீழ் பகுதியில் 10 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. முதல் மாடியில் தங்கும் அறைகள் கட்டப்பட்டு வாடகைக்கு மக்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் தூத்துக்குடியை சேர்ந்த சத்யா, சுகந்தன் ஆகியேர் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு அவர்கள் தங்கியிருந்த அறையில் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது.

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய குண்டால் சத்யா, சுகந்தன் ஆகியேரின் கைகள், விரல்கள் துண்டிக்கப்பட்டது. இந்த சத்தத்தை கேட்டு அலறி அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயம் அடைந்த சத்யாவை சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், சுகந்தனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கவலைக்கிடமான நிலையில் உள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியை சேர்ந்த இதில், சத்யா, சுகந்தன் இருவரும் பிரபலமாக ரவுடிகள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல கொலை வழக்கில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இவர்கள், எதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தார்கள் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடித்தது நாட்டு வெடிகுண்டு கமிஷனர் திரிபாதி சென்னை கீழ்ப்பாக்கம் குடியிருப்பில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு'' என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி விளக்கம் அளித்துள்ளார்.சென்னையில் நடந்த குண்டுவெடிப்பில் அதிர்ச்சியான காவல்துறை, இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து காவல்துறை ஆணையர் திரிபாதி, வெடித்தது நாட்டு வெடிகுண்டுதான் என்றார்.

குண்டுவெடிப்பில் காயம் அடைந்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் நாட்டு வெடிகுண்டு எப்படி வந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் திரிபாதி கூறினார்.

தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியான இவர்கள் மீது அம் மாவட்டத்தில் பல கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், காவல்துறையினரால் தேடப்பட்டு வருதாகவும் திரிபாதி தெரிவித்தார்.

பழி வாங்கும் நடவடிக்கையாக இவர்கள் சென்னையில் தங்கியிருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் ஆணையர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்