முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆதீனத்திற்குட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

பெங்களூர், ஏப். 29 - மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாக நித்யானந்த சுவாமிகள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை ஆதீனத்திற்குட்பட்ட எல்லா கோவில்களும் விரைவில் புணரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். 1,500 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனம் என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தின் 292 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பெங்களூர் பிடதியில் அமைந்துள்ள நித்யானந்த பீடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தன் வாரிசாகவும், மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாகவும் நித்யானந்த பீடத்தின் பீடாதிபதி நித்யானந்தாவை நியமிப்பதாக ஸ்ரீஞானசம்பந்த தேசிய பரமாச்சார்ய சுவாமிகள் அறிவித்தார். ஆதீனப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு அடையாளமாக நித்யானந்தாவிடம் தங்க செங்கோலை அளித்து, தங்கக் கிரீடத்தை சூட்டினார் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள். இதற்கான உறுதிமொழி பத்திரத்தையும் நித்யானந்தாவிடம் அவர் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், 

மதுரை ஆதீனத்தின் தோற்றம் தெரியவில்லை. எனினும் தென்னிந்திய சைவ சித்தாந்த தத்துவத்தின் நான்கு துறவிகளில் ஒருவராக அறியப்படும் திருஞானசம்பந்தர், 1,500 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஆதீனத்தை புணரமைத்தார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன. மதுரை ஆதீனத்தின் விதிகள் மற்றும் கோட்பாடுகளின்படி சைவ வேளாளர்கள்தான் மதுரை ஆதீனத்தின் குருமகா சன்னிதானமாக இருக்க வேண்டும். இப்பொறுப்பை ஏற்பவர் திருஞான சம்பந்தரின் புனித பணிகளை தொடர வேண்டும். 

என் கனவில் சிவ பெருமான் தோன்றி மதுரை ஆதீனத்தின் அடுத்த குருமகா சன்னிதானமாக நித்யானந்தரை நியமிக்குமாறு அருள்பாலித்தார். நித்யானந்தரை 2 முறை சந்தித்து அவரது செயல்களை கவனித்தேன். திருஞானசம்பந்தரை போல கொடை வள்ளலாகவும், ஆற்றல் வாய்ந்தவராகவும் இருப்பதால் அவரை குருமகா சன்னிதானமாக நியமிக்க முடிவு செய்தேன். மதுரை ஆதீனத்தை நித்யானந்த சுவாமிகள் பன்னாட்டு அளவில் புகழ் பெற செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெகு விரைவில் மதுரையில் பட்டம் சூட்டு விழா நடைபெறும். எனவே மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாக பரமஹம்ச நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிய பரமாச்சார்ய சுவாமிகளாக பிரகடனம் செய்கிறேன் என்றார்.  இதைத் தொடர்ந்து பேசிய நித்யானந்தா, 

சொக்கநாதர், மீனாட்சி அம்மன், திருஞானசம்பந்தரை சாட்சியாக வைத்து மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாக அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். சைவ சித்தாந்த தத்துவத்தை மீண்டும் எழுச்சி கொள்ள செய்வேன். மதுரை ஆதீனத்தை பன்னாட்டு அளவில் உயர்த்துவேன் என்று உறுதி அளிக்கிறேன். மதுரை ஆதீனத்தின் ஆன்மீக பணிகளுக்கு ஒரு கோடி ரூபாயை காணிக்கையாக அளிக்கிறேன். மதுரை ஆதீனத்திற்குட்பட்ட எல்லா கோவில்களும் விரைவில் புணரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறும். இக்கோவில்களில் அன்னதானம் வழங்கப்படும். மதுரை ஆதீனத்தின் தலைமை பொறுப்பை நான் ஏற்பது குறித்து யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அதை எதிர்கொள்வேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago