முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே மாதம் 11-ம்தேதி சினேகா-பிரசன்னா திருமணம் சென்னையில் நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 1 மே 2012      சினிமா
Image Unavailable

சென்னை, மே.- 1 - நடிகர் பிரசன்னா, சினேகா காதல் திருமணம் மே மாதம் 11-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா. இவர்கள் கடந்த பல மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த செய்தியை அப்போது மீடியாவிடம் மறுத்தார்கள். தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணம் வருகின்ற 11.5.12 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் சென்னை வானகரம் அம்பத்தூர்  சாலையிலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடைபெறவுள்ளது. 10.5.12 வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு அதே மண்டபத்தில் வரவேற்பு நடக்கிறது. இதில் திரளான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர். இதுபற்றி நிருபர்களிடம் பிரசன்னா - சினேகா கூறியதாவது:- குறுகிய காலத்தில் எங்களிடையே காதல் ஏற்பட்டது. இந்த செய்தி மீடியாக்களில் வெளியானபோது எங்கள் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் அப்போது மறுத்தோம். இப்போது பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்கவுள்ளது. எங்களிடையே நல்ல புரிதல் இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு சினேகா விரும்பினால் நடிப்பார். அதற்கு தடையாக இருக்க மாட்டேன். அதே நேரத்தில் சினேகா விருப்பத்துடன் திருணத்திற்கு பின் தனி குடித்தனம் செல்ல இருக்கிறோம். இந்த திருமணத்திற்கு என் மதப்படியும், சினேகா மதப்படியும் தாலி கட்டுகிறேன். அதாவது இரண்டுமுறை சினேகாவிற்கு தாலி கட்டுகிறேன். இப்போதைக்கு ஹனிமூன் இல்லை. சினேகா நடித்து முடிக்க வேண்டிய படங்கள் பாக்கி உள்ளது.  அதை முடித்துக் கொடுத்துவிட்டு பிறகு தேனிலவுக்கு செல்வோம். எங்கே என்பது இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!