முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸி. வீராங்கனை சமந்தா காலிறுதி சுற்றுக்கு முன்னேறம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், ஜூன். - 5 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சமந்தா ஸ்ட்ராசர் 4 -வது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி னார். இந்த வருடத்தின் 2- வது கிராண்ட் ஸ்லாம் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் கடந்த ஒரு வார காலத்திற்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து ள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் ஆஸ்திரேலிய வீராங்கனை சமந்தா ஸ்ட்ராசரும், அமெரிக்க வீராங்க

னையும் மோதினர். இந்த ஆட்டத்தில், அனுபவமிக்க வீராங்கனையான சமந்தா சிறப்பாக ஆடி, 7-5, 6- 4 என்ற நேர் செட் கணக்கில் ஸ்டெபானிசை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் சாரா இராணி, டொமினிகா சிபுல்கோவா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன் னேறினர். ஆடவர் பிரிவில் ஜோகோ விக் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெ ற்றனர். 

பிரான்ஸ் வீரர் ஜோவில் பிராட் சாங் கா - சுவிஸ் வீரர் தனிஸ்லாஸ் வாவ்ரி ங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆட்டம் 6- 4, 7- 6(6), 3-6, 3- 6, 4-2 என்ற நிலையில் இருந்த போது நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதே போல அர்ஜென்டினா வீரர் டெ ல் பொர்ட்டோ மற்றும் செக். குடியரசு வீரர் பெர்டிக் ஆகியோருக்கு இடையே நடந்த ஆட்டம் 7-6(6), 1- 6, 6-3 என்ற நிலையில் இருந்த போது நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டமும் இன்று நடக்கிறது. 

கலப்பு இரட்டையரில் மகேஷ் பூபதி மற்றும் சானியா மிர்சா ஜோடி 7- 6(4), 6- 3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் ஜோடி விர்ஜினி மற்றும் நிக்கோல்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற் றது. முன்னதாக நடந்த ஆட்டத்தில் இந்திய ாவின் லியாண்டர் பயஸ் மற்றும் ரஷ் யாவின் வெஸ்னினா ஜோடி கலப்பு இரட்டையரில் வெற்றி பெற்று காலிறு திக்கு தகுதி பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்