முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம் - சதானந்தா

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

பெங்களூரு, ஜுன் - 19 - கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துவதில் பாரதிய ஜனதாவுக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை என்று அம்மாநில முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்ததாவது, பதவிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டப் பேரவை தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். சட்ட மேலவை தேர்தலுக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் ஏதாவது ஒரு விஷயம் அமைச்சரவை விரிவாக்கத்திற்கு தடையாக இருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால் வேட்பாளர் தேர்வு தொடர்பாக டெல்லி செல்ல இருக்கிறேன். அப்போது கட்சி மேலிட தலைவர்களுடன் கலந்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஏற்கனவே தாமதமாகி இருக்கும் பருவமழை இன்னும் சில தினங்களில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் என்றார் அவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!