முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு - லயோலா கருத்து கணிப்பு

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.2 - நடைபெறவுள்ள 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணி அமோக வெற்றி பெறும் என்று லயோலா கல்லூரி மாணவர்கள்  நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று 51.1 சதவீத வாக்காளர்களும், தி.மு.க.வுக்கு அந்த வாய்ப்பு இருப்பதாக 36.7 வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் லயோலா கல்லூரியில் மக்கள் ஆய்வகம்  என்ற அமைப்பின் சார்பில் மாநில அளவில் பொதுமக்களை நேரிடையாக சந்தித்து கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். அதன் அடிப்படையில் மார்ச் மாதம் 21-ம் முதல்  29-ந்தேதி வரையிலும் பேராசிரியர் ராஜநாயகம்  தலைமையில் தமிழகத்திலுள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் கள ஆய்வு நடத்தி அதற்கான முடிவுகளை வெளியிட்டனர். இந்த முடிவுகள் நேற்று லயோலா கல்லூரியில் வெளியிடப்பட்டது.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பொதுமக்கள் இன்றைய தினத்தில்  வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வாக்காளர்கள் அ.தி.மு.க. அணிக்கு 48.6 சதவீதம் பேரும், தி.மு.க. அணிக்கு 41.7 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று 8.2 சதவீதமும்,  பிறருக்கு வாக்களிப்பதாக 1.5 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கிறீர்கள் எனக்கேட்டபோது, 

அ.தி.மு.க. அணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று 51.1 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க. தனித்து வெற்றி பெறும் என்று 25.9 சதவீதம் பேரும், அணியுடன் இணைந்து பெரும்பான்மை பெறும் என்று 25.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

தி.மு.க. அதிக பெரும்பான்மை இடங்களை பெறும் என்று கருத்து தெரிவித்துள்ள 36.7 சதவீதம் மக்களில் தி.மு.க. தனித்து வெற்றி பெறும் என்று 16.2 சதவீதமும்பேரும், அந்த அணியினரோடு இணைந்து தான் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியும் என 20.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் பொறுப்புடனும் பாரபட்சமற்ற வகையில் செயல்படுவதாக 60.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 24.7 சதவீதம் பேர் அந்த ஆணையம் அதிகார வரம்பை மீறி கண்டிப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகளை ஒப்பிடும்போது தொகுதி பிரச்சனைகளை தீர்ப்பதில் அ.தி.மு.க. அணி கவனம் செலுத்தும் என்று 33.7 சதவீதம் பேரும், தி.மு.க. அணிக்கு சாதமாக 21.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க. தேர்தலை புறக்கணித்திருப்பதாக அறிவித்திருப்பதால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று 53.6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேட்பாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவருக்கு வாக்களிப்பது தவறு என்று 80.5 சதவிகிதம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த தேர்தல்களில் தாம் பணம் பெற்றுக் கொண்டதாக 47.9 சதவிகிதம் பேர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஒருவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தான் விரும்புகிற வேறொரு வேட்பாளருக்கு வாக்களிப்பதில் தவறில்லை என்று 31.5 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 

மக்களிடம் கருத்து கேட்டபோது அந்தந்த ஊர்களில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத்தான் மையமாக வைத்து கருத்து கூறுகின்றனர். உதாரணத்திற்கு திருப்பூரில் சாயப்பட்டறைகள் குறித்தும், வேறு சில இடங்களில் மணல் கடத்தல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொகுதி அளவிலான விவரங்களை நுணுகி ஆராய்ந்து கருத்துக்கணிப்பு நடத்தியதில் 5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் அ.தி.மு.க.  அணிக்கு 105 தொகுதிகள் வரை  சாதகமாக இருப்பதாகவும், தி.மு.க. அணிக்கு 70 தொகுதிகள் இருப்பதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. மீதமுள்ள 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் ஆய்வக நிர்வாகியான பேராசிரியர் ராஜநாயகம் இக்கருத்துக்கணிப்பை வெளியிட கல்வியாளர் ஹென்றி ஜெரோம் பெற்றுக்கொண்டார். களப்பணி ஆய்வு மேற்கொண்ட மாணவர்களும் பேராசிரியர்களும்  இந்த நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago