முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பணக்காரர்கள் வரிசையில் 16-வது இடத்தில் கலாநிதிமாறன்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப் 2 - கருணாநிதியின் பேரனும் சன் டி.வி. குழுமத்தின் தலைவருமான கலாநிதிமாறன் இந்திய பணக்காரர்கள் வரிசையில் 16 இடத்திலும், உலக பணக்காரர்கள் வரிசையில் 310-வது இடத்திலும் இருக்கிறார். இது குறித்து பிரபல போர்பிஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள 2011 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 16-வது இடத்தில் இருப்பவர் கருணாநிதியின் பேரனும் சன் டி.வி குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன். இவரது சொத்து மதிப்பு 350 கோடி டாலர் அதாவது இந்திய ரூபாயில்  கிட்டத்தட்ட ரூ. 17,500 கோடி . இவர் 1990களில்தான் சன் டி.வி.யை துவக்கினார்.

20 ஆண்டுகளிலேயே இந்திய பரம்பரை பணக்காரர்களையே ஓரம் தள்ளி விட்டு, இந்திய பணக்காரர்கள் வரிசையில் 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

போர்பிஸ் இதழ் வெளியிட்டுள்ள 50 இந்திய பணக்காரர்களின் விவரம் வருமாறு:-

இந்தியாவின் 50 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்கள் வருமாறு:-

1. லட்சுமி மிட்டல் (3110  கோடி டாலர்) 

2. முகேஷ் அம்பானி,

3. ஆசிம் பிரேம்ஜி

4. சசி மற்றும் ரவி ரூயா

5. சாவித்திரி ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தினர்.

6. கவுதம் அதானி,

7. குமார் பிர்லா,

8. அனில் அம்பானி,

9. சனில் மிட்டல் மற்றும் குடும்பத்தினர்

10. ஆதி கோத்ரெஜ் மற்றும் குடும்பத்தினர்

11. குஷால் பால்சிங்

12. அனில் அகர்வால்,

13. திலீப் சங்வி,

14. ஷிவ் நாடார்,

15. மல்வீந்தர் மற்றும் சிவீந்தர் சிங்,

16. கலாநிதி மாறன் (350 கோடி டாலர்),

17. உதய் கோடக்,

18. மிக்கி ஜக்தியானி,

19. சுபாஷ் சந்திரா மற்றும் குடும்பத்தினர்,

20. பங்கஜ் பட்டேல்,

21. இந்து ஜெயின்

22. எம்.ராவ்,

23. சைரஸ் பூனாவாலா,

24. ராஜன் ரஹேஜா குடும்பத்தினர்,

25. தேச பந்து,

26. என்.ஆர்.நாராயண மூர்த்தி,

27.கவுதம் தபார்,

28. சுபீர் மற்றும் சபீர் மேத்தா,

29. அலோக் லோகியா,

30. வேணு கோபால் தூத்,

31. சந்துரு ரஹேஜா,

32. நந்தன் நிலகானி மற்றும் குடும்பத்தினர்.

33. அஜய் கல்சி,

34. ராகுல் பஜாஜ்,

35. சேனாபதி கோபால கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர்.

36. பிரிஜ்மோகன்லால் முன்ஜால்,

37. ஆஞ்சி ரெட்டி,

38. விஜய மல்லையா,

39.அஜய் பிரமால்,

40. விகாஷ் ஓபராய்,

41. பாபா கல்யாணி,

42. ராம பிரசாத் கோயங்கா,

43. கேசுப் மஹிந்திரா,

44. தினேஷ் மற்றும் குடும்பத்தினர் 

45. ராகேஷ் ஜுன்ஜுன் வாலா,

46. பிரிஜ் பூஷன்,

47. யூசப் ஹமீது மற்றும் குடும்பத்தினர்.

48. எஸ்.டி.சிபுலால் மற்றும் குடும்பத்தினர்,

49. பூபேந்திர குமார் மோடி,

50. மங்கல் பிரபாத் லோதா(110 கோடி டாலர்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago