நடுநிலையுடன் தேர்தல் ஆணையம் - பிரவீண்குமார்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
TN EC

 

நாகர்கோவில்,ஏப்.2  - தேர்தல் ஆணையம் நடுநிலையுடன்தான் செயல்படுகிறது என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் தெரிவித்தார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அவர், பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீண்குமார், தேர்தல் ஆணையம் யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை. நடுநிலையுடன்தான் செயல்படுகிறது. மதுரை கலெக்டர் நடுநிலையுடன்தான் செயல்படுகிறார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மேற்கொண்டு எதையும் கூற முடியாது என்றார். மேலும் சட்டத்துக்கு புறம்பாக யார் பணம் எடுத்துச் சென்றாலும் சோதனையின் போது பறிமுதல் செய்யப்படுகிறது. உரிய ஆவணங்கள் இருந்தால் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்து விடுவோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: