உலகக் கோப்பை யாருக்கு? இன்று மும்பையில் உச்ச கட்ட மோதல்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
World Cup1

 

மும்பை, ஏப். 2 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் உச்ச கட்ட மோதலில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத இருக்கின்றன. ரசிகர்களால் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் இந்த ஆட்டம் மும்பையில் வாங்க்டே மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. 

10 -வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் 19 -ம் தேதி துவங்கியது. இதில் 14 நாடுகள் பங்கேற்றன. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. 

இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்திய இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. 

அநைவரும் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் இறுதிப் போட்டி மும் பை வாங்க்டே மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி பிற்பகல் 2. 30 மணிக்கு துவங்குகிறது. 

இதில் தோனி தலைமையிலான இந்திய அணியும், சங்கக்கரா தலை மையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் மோதுவ து இதுவே முதல் முறையாகும். 

இரு அணிகளும் ஏற்கனவே ஒரு முறை உலகக் கோப்பையை வென்று உல்ளன. இந்திய அணி 1983 -ம் ஆண்டும், இலங்கை அணி 1996 -ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்றன. 2 -வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்ற இரு அணிகளுமே கடுமையாக போராடும். 

இதனால் இன்றைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிக ளின் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல இது நல்ல வாய்ப்பாகு ம். இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை பயன்படு த்தி விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். 

முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரி க்காவிடம் மட்டுமே தோற்றது. வங்காளதேசம், அயர்லாந்து, நெதர் லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளை வென்றது. இங்கிலாந்து டன் டை செய்தது. 

கால் இறுதியில் 4 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவையு ம், அரை இறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது. சிறந்த அணிகளை வீழ்த்தி இருப்பதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 

அதே நேரத்தில், இலங்கை அணியை சாதாரணமாக நினைக்க இயலா து. அந்த அணியும் இந்தியாவைப் போல சிறப்பாக ஆடி வருகிறது. அந்த அணியும் சமபலம் வாய்ந்தது. சவால்களை சந்திக்க ஆயத்தமாக உள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, சேவாக் - டெண்டுல்கர் தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைய வேண்டும். இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர்களில் டெண்டுல்கர் (464 ரன்) 2 -வது இடத்திலு ம், சேவாக் (380 ரன்) 6 -வது இடத்திலும் உள்ளனர். 

அதே நேரத்தில் மிடில் ஆர்டர் வரிசையும் நன்றாக இருக்க வேண்டும். கால் இறுதி வரை சிறப்பாக ஆடி வந்த யுவராஜ் சிங், பாகிஸ்தானுக் கு எதிரான அரை இறுதியில் சொதப்பி விட்டார். 

இதனால் முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் மீண்டும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதேபோல கேப்டன் தோனியும் இன்னும் முத்திரை பதிக்கும் விதத்தில் ஆட வேண்டும். 

கடந்த 2 ஆட்டத்திலும் ரெய்னா நன்றாக விளையாடினார். இதனால் அவர் தொடர்ந்து அணியில் நீடிப்பார். இதனால் அதிரடி வீரரான யூசு ப் பதான் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. 

ஒரு வேளை கோலி நீக்கப்பட்டால் வாய்ப்பு கிடைக்கலாம். மிடில் ஆர்டரில் கோலி நன்றாக ஆடிக் கூடியவர். பாகிஸ்தானுக்கு எதிராக சரியாக ஆடாவிட்டாலும் அவர் நீக்கப்படமாட்டார் என்றே தெரிகிறது. 

பந்து வீச்சில் மாற்றம் இருக்கும். வேகப் பந்து வீச்சாளர் நெக்ராவுக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய இறு திப் போட்டியில் அவர் ஆடமாட்டார். அவருக்குப் பதிலாக சுழற் பந் து வீச்சாளர் அஸ்வின் இடம் பெறுவார். 

ஆடுகள தன்மையைப் பொறுத்து 3 -வது வேகப் பந்து வீரர் இடம் பெ றுவாரா என்று தெரியும். என்றாலும், ஸ்ரீசாந்த் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 

இலங்கை அணி பந்து வீச்சில் சிறந்து விளங்குகிறது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்னுக்கு மேல் எடுப்பதே நல் லது. அப்போது தான் இலங்கை அணிக்கு அது கடின இலக்காக இருக் கும். 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிச் சுற்று ஆட்டம் பிற்பகல் ஆட்டம் என்பதால் சுழற் பந்து வீச்சு சாதக மாக திரும்ப வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தப் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். 

இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தாலும், 2 -வது பேட்டிங் செ ய்தாலும், சிறப்பாக ஆடக் கூடியதே. அந்த அணி இங்கிலாந்துக்கு எதி ரான கால் இறுதியில் 230 ரன் இலக்கை விக்கெட் இழக்காமல் 10 விக் கெட்டில் வென்றது. 

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறையிலும், அந்த அணி சிற ந்து விளங்குகிறது. தொடக்க ஜோடியும், மிடில் ஆர்டர் வரிசையும் அபாரமாக இருக்கிறது. இது அந்த அணியின் பலமாகும். 

உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் இலங் கை அணியின் துவக்க வீரர் தில்ஷான் (467) உள்ளார். கேப்டன் சங்கக் கரா 417 ரன்னும், மற்றொரு துவக்க வீரர் தரங்கா 397 ரன்னும் எடுத்து ள்ளனர். 

இதே போல ஜெயவர்த்தனே, சமரவீரா, சமரசில்வா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர். இதில் ஜெயவர்த்தனே டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 -க்கு 20 ஆகிய 3 போட்டிகளிலும் நன்றாக ஆடக் கூடியவர். 

இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரை மலிங்கா மற்றும் முரளீதரன் இருவரும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்கள். முரளீதரன் முழு உடல் தகுதியுடன் இல்லை. என்றாலும் தனது கடைசி போட்டி என்பதால் ஆடுவார். மேத்யூஸ் காயம் அடைந்ததால் அவர் விளை யாட வாய்ப்பு இல்லை. 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த இறுதி ப் போட்டி மும்பையில் உள்ள வாங்க்கேட மைதானத்தில் பிற்பகல் 2. 30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி தூர்தர்ஷன், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: