முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ், ராணுவ துறைகளை நவீனப்படுத்துகிறது பாகிஸ்தான்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், ஆக. - 1 - ராணுவம், போலீஸ் துறைகளை ரூ. 1,300 கோடி செலவில் நவீனப்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.  பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்களின் தாக்குதல்களால் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இவர்கள் நடத்தும் தற்கொலை தாக்குதலில் பலர் உயிரிழக்கிறார்கள். எனவே இதை ஒடுக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ராணுவம், போலீஸ் துறைகள் நவீனப்படுத்தப்படுகிறது.  உளவுத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் இடையே தேசிய தகவல் தொடர்பு கார்ப்பரேசன் மூலம் ஒருங்கிணைந்த நவீன தகவல் தொடர்பு கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக சுமார் ரூ. 1,300 கோடி செலவிடப்படுகிறது. இதன் முதல் கட்டமாக 10 முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது. பின்னர் மாவட்ட தலைநகர் மற்றும் துணை நகரங்களில் இந்த வசதிகள் படிப்படியாக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.  இது பற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த புதிய திட்டம் மூலம் தகவல் தொடர்பை மேம்படுத்துவது மட்டுமின்றி சந்தேகிக்கப்படும் நபர்கள், தீவிரவாதிகள் நடவடிக்கை கண்காணித்து ஒடுக்க முடியும் என்றார். இருப்பினும் இத்திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வர இருக்கிறது என்ற விபரம் ஏதும் வெளியிடப்படவில்லை.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!