முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் சுரங்க விபத்து: 8 பேர் பலி

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஆக. - 6 - சீனாவின் வட பகுதியில் உள்ள ஷான்ஜி மாகாணத்தில் சுரங்கம் ஒன்றில் வெள்ளம் புகுந்ததில் அங்கு பணியில் இருந்த 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  பலத்த காயமடைந்த 4 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 34 பேர் அந்த சுரங்கத்தில் பணியாற்றியதாகவும் அதில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் தெரிவித்தனர். உயிரிழந்த 8 பேரின் சடலங்களை மீட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்சிகோவின் கோகுலியா மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. அங்கு மொத்தம் 200 பேர் பணிபுரிந்து கொண்டிருந்தனர். விபத்து ஏற்பட்டவுடன் மற்றவர்கள் பத்திரமாக வெளியேறி விட்ட நிலையில் 6 பேர் மட்டுமே சிக்கி கொண்டதாகவும் காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் 5 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாகவும், ஒருவரை தொடர்ந்து தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சுரங்க விபத்துக்கு நிலநடுக்கம் அல்லது எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!