முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியஅரசு சட்டவிரோதமானதுதான்! அத்வானி கருத்துக்கு தாக்கரே ஆதரவு

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஆக. - 13 - ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறிய கருத்தை சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே ஆதரித்துள்ளார். சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் எழுதிய தலையங்கத்தில் கூறியிருப்பதாவது, ஜனநாயகத்தில் சில வார்த்தைகள் நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானதாக இருக்கலாம். எனவே அவற்றை விழுங்க வேண்டி வந்தது. ஆனால் அதனாலேயே உண்மை வெளிப்படாமல் அமுங்கி விடாது. அத்வானி வாய் தவறி பேசியிருக்கலாம். ஆனால் அவரது வாயில் இருந்து மத்திய அரசை பற்றிய கசப்பான உண்மை வெளிவந்து விட்டது. அக்கருத்தை அவர் பின்னர் வாபஸ் வாங்கியிருக்க தேவையில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது அரசு சட்டவிரோதமானதுதான். அது சி.பி.ஐ. அமைப்பை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது. அசாம் விவகாரம் குறித்த அத்வானியின் பேச்சு சிறப்பாக இருந்தது என்று பால்தாக்கரே தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்