Idhayam Matrimony

பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி சினிமா இயக்குனர் மகன் பலி

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.17 - சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் நீச்சல் குளத்தில் 7 வயது மாணவன் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கே.கே.நகர் அழகிரி சாமி சாலையில் பத்மா சேஷாத்திரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திரைப்பட இயக்குனர் மனோகரனின் மகன் ரஞ்சன் (7) 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றான் ரஞ்சன். காலை 8.50 மணிக்கு இறைவணக்கம் முடிந்ததும் முதல் வகுப்பே நீச்சல் பயிற்சி என்பதால் ரஞ்சன் உள்பட 26 மாணவர்கள் நீச்சல் குளத்திற்கு சென்றனர்.  அங்கு அவர்களுக்கு பயிற்சியாளர் ராஜசேகரன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. உயிர்காப்பு ஊழியர் அருண்குமார் உள்பட பலர் பயிற்சியை அளித்தனர். பயிற்சி முடிந்த பிறகு மாணவர்களை எண்ணிப் பார்த்தபோது 25 பேர் தான் இருந்தனர். ஒரு மாணவனை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பயிற்சியாளர்கள் நீச்சல் குளத்தை பார்த்தபோது ஒரு மாணவனின் உடல் மிதந்தது.

உடனடியாக அந்த மாணவனை விஜயா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் மாணவன் உயிர்பிழைக்கவில்லை. ரஞ்சன் இறந்த செய்தியை அறிந்ததும் பெற்றோர்கள் அலறி அடித்து வந்தனர். இந்த செய்தி பரவியதும் மற்ற பெற்றோர்களும் பரபரப்பு அடைந்தனர்.  போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago