முக்கிய செய்திகள்

மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் வேட்புமனுத்தாக்கல் செய்தார்

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      இந்தியா
buddhadeb bhattacharjee

கொல்கத்தா,ஏப்.- 6 - மேற்குவங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜியா நேற்று ஜதேவ்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தார். மேற்குவங்காள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 6 கட்டமாக நடந்து வருகிறது. தேர்தல் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முதல்வரும் இடதுகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாசார்ஜியாவும் போட்டியிடுகிறார். தெற்கு 24 பார்க்கானா மாவட்டத்தில் உள்ள ஜதேவ்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட புத்ததேவ் நேற்று பலத்த பாதுகாப்புக்கிடையே தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் இவர் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக முன்னாள் தலைமை செயலாளர் மணீஷ்குப்தா போட்டியிடுகிறார். புத்ததேவ் வேட்புமனுத்தாக்கல் செய்ய சென்றபோது அவருடன் அவருடைய தேர்தல் ஏஜன்ட், கொல்கத்தா மாநகராட்சி முன்னாள் மேயர் பிகாஷ் ரஞ்ஜன் பட்டாசார்ஜியா, தெற்கு 24 பர்கானா மாவட்ட இடதுகம்யூனிஸ்ட் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான சுஜன் சக்ரவர்த்தி ஆகியோர் உடன் சென்றனர். மேற்குவங்காளத்தில் சட்டசபைக்கு 6 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக 75 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. வடக்கு மற்றும் தெற்கு 24 பர்க்கானா தொகுதிகளில் இந்த 75 தொகுதிகளும் உள்ளன. கடந்த 2-ம் தேதி முதல் இந்த தொகுதிகளுக்கு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. வருகின்ற 9-ம் தேதியுடன் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: