முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: இறுதிச் சுற்றில் அசரென்கா - செரீனா

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், செப். 9 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகளான அசரெ ன்கா மற்றும் செரீனா வில்லியம்ஸ் இருவரும் அரை இறுதியில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். 

இதில் உலகின் முதல் நிலை வீராங்க னையான விக்டோரியா அசரென்கா அரை இறுதியில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவையும், செரீனா வில்லியம்ஸ், இத்தாலி வீராங்கனை சாரா இர்ரானியையும் வீழ்த்தினர். 

இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த 2 வார காலமாக நடைபெற்று வரு கிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களம் இறங்கினர். இந்தப் போ  ட்டி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. 

இதில் பங்கேற்று வரும் முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் அரை இறுதி ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் உலக நம்பர் - 1 வீராங்கனையா  ன அசரென்காவும், ரஷ்ய வீராங்கனை மரியாவும் மோதினர். 

இதில் அசரென்கா சிறப்பாக ஆடி, 3 -6, 6 -2, 6 -4 என்ற செட் கணக்கில் விம்பிள் டன் முன்னாள் சாம்பியன் ஷரபோவா வை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

அமெரிக்க ஓபனில் அசரென்கா முதன் முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெ ற்று இருக்கிறார். இதற்கு முன்பு அவர் 4-வது சுற்றுக்கு முன்னேறியதே சாதனையாக இருந்தது. 

மகளிருக்கான மற்றொரு அரை இறுதி யில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்சும், இத்தாலி வீராங்கனை சாராவும் மோதினர். 

இந்த ஆட்டத்தில் செரீனா தனது அனுப வத்தை நன்கு வெளிப்படுத்தினார். இறுதியில் அவர் 6 - 1, 6 - 2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனையை வீழ்த்தினார். 

அமெரிக்க முன்னணி வீராங்கனையா  ன செரீனா 5 -வது முறையாக அமெரிக் க ஓபன் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறார். 

ஆடவருக்கான ஒற்றையைர் பிரிவின் அரை இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிக், டேவிட் பெர்ரர் , ஆன்டி முர்ரே மற்று ம் பெர்டிச் ஆகியோர் தகுதி பெற்றனர். 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் ரேடக் ஸ்டீபானிக் ஜோடி அமெரிக்காவின் பாப் பிரை யான் மற்றும் மைக் பிரையான் இணை  யிடம் 6 -2, 6 -4 என்ற நேர் செட் கணக் கில் தோற்று ரன்னர்ஸ் அப் பட்டம் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்