கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பாக்., பிரதமர்ஆஜர்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத். செப். 19  - கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான்  சுப்ரீம் கோர்ட்டில் அந்நாட்டு பிரதமர்  ராஜா  பர்வேஷ் அஸ்ரப் நேற்று ஆஜரானார். பாகிஸ்தானில்  பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையில்  கூட்ட ணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மீது  பல ஆண்டுகளுக்கு முன்பு  லஞ்ச உழல் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதற்கு  பிறகு  இவர் மீதான  பழைய ஊழல் வழக்குகளை  தூசி தட்டி எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டது. 

ஆனால்  ஆசிப் அலி சர்தாரி மீது   எந்த வழக்கும் புதுப்பிக்கப்படவில்லை.

இதனால்  பாகிஸ்தான் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு  கடும்  க ண்டனம் தெரிவித்து இருந்தது.

இதை அடுத்து  அப்போது பிரதமராக இருந்த யூசப் ரஜா கிலானி  தனது பதவியை  இழக்க நேர்ந்தது.

இதை அடுத்து புதிய பிரதமராக  ராஜா பர்வேஷ் அஸ்ரர  பதவி ஏற்றார்.

இவருக்கும் சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஜனாதிபதி  ஆசிப் அலி சர்தாரி மீதான பழையை வழக்குகளை புதுப்பிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை  அவர் நிறைவேற்றவில்லை. இதை அடுத்து  பிரதமர் ராஜா பர்வேஷ்  அஸ்ரப் மீது கோர்ட்டு  அவமதிப்பு வழக்கை ஏன்  தொடரக்கூடாது என்றும் இது  தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டில்  ஆஜராகும்படியும்  சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டது.

இதை அடுத்து  சென்ற மாதம்  சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான பிரதமர் ராஜா  அஸ்ரப்பை  மீண்டும்  ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை அடுத்து நேற்று அவர் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில்  ஆஜரானார்.

அவர் காரில்  வந்து இறங்கிய போது  கோர்ட்டுக்கு வெளியே  நின்றிருந்த அவரது  ஆதரவாளர்கள் பலத்த கரகோஷம் செய்தனர். அவர்களை பார்த்து அவரும்  கைகளை அசைத்தார்.

பிரதான கேட் வழியாக  கோர்ட்டில் நுழைந்த  அவரை  ஆளும் கூட்டணியை  சேர்ந்த  மத்திய  அமைச்சர்கள், மற்றும்  கூட்டணி  கட்சிகளின்  தலைவர்கள் பலர் வரவேற்றனர்.

பிறகு  கோர்ட்டு எண் 4 ல் அவர் நீதிபதிகள் முன்பு ஆஜரானார்.

நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு  பதில் அளித்த  பிறகு  பிரதமர் அஸ்ரப்  கோர்ட்டிலிருந்து வெளியேறி  தனது அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.

பிரதமர்  ஆஜரானதை  முன்னிட்டு  சுப்ரீம் கோர்ட்டில்  நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டு  இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: