முக்கிய செய்திகள்

உமாபாரதிக்கு இடையூறு மன்னிப்பு கேட்டார் ஹஸரே

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      இந்தியா
uma-bharti

 

புதுடெல்லி,ஏப்.- 8 - பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான உமாபாரதிக்கு இடையூறு செய்ததற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் ஹஸரே மன்னிப்பு கேட்டார்.  நாட்டில் ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி டெல்லியில் உள்ள சந்தர் மந்தரில் பிரபல காந்தியவாதியும் சமூக சேவகருமான அண்ணா ஹஸரே சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு பல்வேறு கட்சிகளும் சமூக அமைப்புகளும் சேவை நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஹஸரே உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் ஏராளமானோர் கூடியுள்ளனர். அந்த இடத்திற்கு இந்துத்துவா கொள்கையுடையவரும் பாரதிய ஜனதாவுக்கு மீண்டும் திரும்பியுள்ள உமாபாரதி வந்தார். அப்போது அங்கிருந்த ஹஸரே ஆதரவாளர்கள் உமாபாரதிக்கு எதிராக கோஷம் போட்டதோடு தகாத வார்த்தைகளை கூறி, அவரை ஓரம் கட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு ஹஸரே மன்னிப்பு கேட்டுள்ளார். உமாபாரதி என்னுடைய சகோதரி என்று ஹஸரே கூறினார். என்னை பார்த்து ஆதரவு தெரிவிக்க வந்த உமாபாரதியை சிலர் ஓரங்கட்டியுள்ளனர். இதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது வருத்தத்திற்குரிய சம்பவம். சிலர் சில தவறான செயல்களை செய்து விடுகின்றனர் என்று உண்ணாவிரத பந்ததலில் கூடியுள்ள தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய ஹஸரே கூறினார். யாரும் இந்த இடத்திற்கு வந்து உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளலாம். நாங்கள் ஜனநாயக முறையை பின்பற்றி வருகிறோம். யாரும் இங்கு உட்காரும் உரிமையை எங்களால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் யாரையும் மேடையில் அமர நாங்கள் அனுமதிக்க முடியாது. இதை சிலர் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளலாம். சிலர் இந்த மேடையை தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தலாம் என்று ஹஸரே மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: