முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: வெங்கையா நாயுடு

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, செப்.23 - பொருளாதார சீர்திருத்தம் பற்றி பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று   வெங்கையா நாயுடு கூறியுள்ளார். தமிழக பாரதீய ஜனதா மகளிர் அணி செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் தமிழரசியோகம் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதீய ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-​

பொருளாதார சீர்திருத்தம் பற்றி பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கிறது. 1991ஆம் ஆண்டு பொருளாதாரம் எப்படி இருந்ததோ அதே நிலையில் தான் இன்றும் இருக்கிறது. பொருளாதார சீர்திருத்தம் செய்யப்போவதாக சொல்லி சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தவறான நடவடிக்கை.

டீசல் விலை உயர்வால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி மேலும் உயரும். வருகிற 26, 27, 28 ஆகிய நாட்களில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் நடக்கிறது. அதில் விலைவாசி உயர்வு, நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்படும். அடுத்த கட்ட போராட்டம் பற்றியும் அறிவிக்கப்படும் என்றார். 

பின்னர் அவரிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே மத்திய பிரதேச மாநிலத்திற்கு வந்தது குறித்து கேட்டபோது, அங்கு நடந்தது புத்தமத பல்கலைக்கழக விழா. இதில் உலகம் முழுவதிலும் உள்ள புத்தமதம் சார்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ராஜபக்சேவையும் அந்த மாநில அரசு அழைத்துள்ளது. பாரதீய ஜனதா கட்சி அழைக்கவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்