Idhayam Matrimony

ஐ.நா.வின் எய்ட்ஸ்ஒழிப்பு நல்லெண்ண தூதராக ஐஸ்வர்யராய் நியமனம்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

ஐ.நா.செப்.- 26 - ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் ஒழிப்பு கூட்டு இயக்க நல்லெண்ண தூதராக முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்ய ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகில் கொடூரமான எய்ட்ஸ் நோயை ஒழிக்க ஐக்கிய நாடுகள் சபை சார்பாக கூட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எய்ட்ஸ் நோயை அடியோடு ஒழிக்க ஐக்கிய நாடுகள் சபையின் ஏஜன்சிகளான யு.என்.எச்.சி.ஆர்., யுனிசெப், டபுள்யு.எப்.பி.,யு.என்.டி.பி.,யு.என்.எப்.பி.எ., யு.என்.ஓ.டி.சி, ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பிரிவு, யுனெஸ்கோ, உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி ஆகியவைகள் சர்வதேச அளவில் எய்ஸ்ட் நோயை ஒழிக்க கூட்டுத்திட்டம் வகுத்து செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக உலகில் இந்தியா உள்பட 20 நாடுகளில் எய்ட்ஸ் நோயை ஒழிக்க இந்த அமைப்புகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஐ.நா.வின் எய்ட்ஸ் நோய் ஒழிப்பு கூட்டு நடவடிக்கையின் நல்லெண்ண தூதராக பிரபல பாலிவுடன் நடிகை ஐஸ்வர்ய ராய் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதாகவும் ஐஸ்வர்ய ராய் தெரிவித்துள்ளார். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எய்ட்ஸ் நோய் இல்லாதவைகளாக இருக்க வேண்டும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பெண்களுக்கும் சிகிச்சை கிடைக்க செய்ய வேண்டும். இதற்கு என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இல்லாமல் இருக்க மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்வை ஐஸ்வர்ய ராய் ஏற்படுத்துவார் ஐ.நா.வின் எய்ட்ஸ் ஒழிப்பு இயக்க நிர்வாக இயக்குனர் மிச்செல் சிதிபி தெரிவித்துள்ளார். ஐஸ்வர்ய ராயை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் புகழ்ந்து பாராட்டுகிறார்கள். வருகின்ற 2015-ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் குழந்தைகளிடத்தில் எய்ட்ஸ் நோயை ஒழிக்க ஐஸ்வர்யா ராய் உதவியாக இருப்பார் என்றும் மிச்சல் மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago