முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களை காப்பாற்ற புரட்சித்தலைவி என்ற கப்பல் வருகிறது நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பேச்சு

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

 

விருதுநகர், ஏப்ரல் - 11 - திமுக என்ற ஊழல் வெள்ளத்தில் மக்களை காப்பாற்றுவதற்காக புரட்சித்தலைவி என்ற கப்பல் மிதந்து வந்துகொண்டிருக்கிறது. மக்கள் தப்பித்துக்கொள்ள கப்பலில் ஏறிவிடுங்கள். இல்லையென்றால் திமுக ஊழல் வெள்ளத்தில் சிக்கிவிடுவீர்கள் என திரைப்பட நடிகர் சிங்கமுத்து சாத்தூரில் எச்சரிக்கை விடுத்தார். இதுபற்றிய விபரம் வருமாறு சாத்தூர் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேருமைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் கே.கே.சிவசாமி, தலைமை கழக பேச்சாளர் பழனிச்சாமி ஐஏஎஸ் ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக  சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மாவின் பாசமிகு தம்பி கழக மாணவரணி செயலாளர்,விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து சிறப்புரையாற்ற திரைப்பட நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து வருகைதந்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் விஜயகாந்த்தை பற்றி பேசுவதற்கு வடிவேலுக்கு என்ன யோக்யதை இருக்கிறது. வடிவேல் வம்பாக திமுக என்கிற கரடியிடம் மாட்டிக்கொண்டார். விரைவில் சின்னாபின்னமாக ஆக போகிறார். அவர் பேசிய உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகலமாக்கிட்டீங்களே என்ற நிலை அவருக்கு நிஜத்திலேயேவரப்போகிறது என்றார். புரட்சித்தலைவி அம்மா எவ்வளவோ தொலை நோக்கு திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். ஆனால் திமுகவோ இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றிவருகிறது. மக்களே ஏமாந்துவிடாதீர்கள். விரைவில் அரசு உங்கள் வீட்டிற்கு வாடகை கேட்கும் நிலையை திமுக ஏற்படுத்திவிடும். நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல் பெருகியுள்ளது. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் அடித்துள்ளனர். தமிழகத்தில் திமுக என்ற ஊழல் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அதில் புரட்சித்தலைவி என்ற கப்பல் மிதந்து வருகிறது. தமிழக மக்களே கப்பலில் ஏறி தப்பித்துவிடுங்கள் இல்லையென்றால் திமுக என்றகிற ஊழல் வெள்ளத்தில் சிக்கிவிடுவீர்கள் பொதுக்கூட்டத்தில் எச்சரித்தார். 

கூட்டத்தில் அதிமுக நகர செயலாளர் வாசன், தொகுதிசெயலாளர் சேதுராமானுஜம், மாணவரணி செயலாளர் செல்வகணேஷ் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony