முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் தில்லு முல்லு...தலைமை தேர்தல் ஆணையர் கடும் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.12 - தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டாலோ, தில்லுமுல்லுகள்  நடந்தாலோ அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று தலைமை த தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.   

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- வாக்காளர்களுக்கு nullத் ஸ்லிப் வழங்கும் பணிகள் முமமுரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை nullத் ஸ்லிப் பெறாதவர்கள், தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளிலேயே பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நாளன்று கூட வாக்காளர்கள் தங்களது சரியான அடையாளத்தை காட்டி nullத் ஸ்லிப்பை பெற்றுக்கொள்ளலாம்.

வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் உடல் ஊனமுற்றோருக்கு அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வரை தங்களது வீல்சேர் வாகனத்திலேயே சென்று வாக்களிக்கலாம். இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் 2 கோடியே 37 லட்சத்து 4 ஆயிரத்து 802 ஆண்களும், 2 கோடியே 34 லட்சத்து 10 ஆயிரத்து 716 பெண்களும் வாக்களிக்க உள்ளனர். தமிழகம் முழுவதும் 54,314 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. 2 லட்சத்து 88  ஆயிரத்து 749 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். மைக்ரோ அப்சர்வர்கள் 12,918 பேர் பணியாற்றுகிறார்கள். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில் வாக்குப்பெட்டிகள் பாதுகாக்கப்படுகின்றன. 234 கவுண்டிங் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தமிழகத்தில் இதுவரை 33 கோடியே 11 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணபட்டுவாடா நடைபெறுவதாக புகார்கள் வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. பணபட்டுவாடா நடைபெறுவதோ, தில்லுமுல்லுகள் நடைபெறுவதோ தெரியவந்தால் அந்த இடத்தில் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரமும், ரத்து செய்யும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. தேர்தலுக்குப்பிறகும் கூட, வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து ரத்து செய்ய முடியும். இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். பேட்டியின்போது துணை தலைமை தேர்தல் அதிகாரி அமுதா உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis