Idhayam Matrimony

ஆண்டிபட்டியில் இறுதிக்கட்ட பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஆண்டிபட்டி,ஏப்.12 - ஆண்டிபட்டியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்ட அ.தி.மு.க வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தங்கதமிழ்செல்வன்,ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார். மேலும் அடக்கம்பட்டி, தேக்கம்பட்டி, மீனாட்சிபுரம், அண்ணாநகர் காலனி, வேலாயுதபுரம் உள்பட அனைத்து கிராமங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறும் போது, ஆண்டிபட்டி என்றுமே அ.தி.மு.க கோட்டையாக இருந்துள்ளது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் மீது தொகுதி மக்கள் அன்பை செலுத்தி வருகின்றனர். 2 முறை பொதுச் செயலாளர் ஜெயலலிதா எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். தேனி அரசு மருத்துவமனை கல்லூரி, பல்கலைக் கழக கலைக்கல்லூரி, சேடபட்டி, ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டம் உட்பட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தந்துள்ளார். எனவே தொகுதி மக்கள் என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைய செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். பிரச்சாரத்தின் போது ஆண்டிபட்டி தொகுதி செயலாளர் ஈஸ்வரிமுருகன், ஒன்றிய செயலாளர் பால்பாண்டியன், தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, பேரூர் செயலாளர் பாலாஜி, அ.தி.முக நகர செயலாளர் ராமசந்திரன், நகர துணை செயலாளர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago