பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதம் - பிரணாப் திருப்திகரம்

வெள்ளிக்கிழமை, 18 பெப்ரவரி 2011      வர்த்தகம்
Ind-Eco

 

புதுடெல்லி, பிப்.8-

வர்த்தக இடைவெளி, பணவீக்கம், உணவுப் பொருட்களின் விலைகள்....null

உயர்ந்துவந்தாலும்கூட, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதம் என்ற அளவில் திருப்திகரமாக உள்ளது என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திருப்தி தெரிவித்துள்ளார். null

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பணவீக்கம், வர்த்தக இடைவெளி, உணவுப் பொருட்களின் விலைகள் போன்றவவை அதிகரித்து வந்தாலும்கூட நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டபடி நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதம் என்ற அளவில் திருப்திகரமாக உள்ளது என்றார். பணவீக்கம், வர்த்தக இடைவெளி, உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை குறைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார். பெரும் சவால்கள் இருந்தாலும்கூட பொருளாதார வளர்ச்சி சீர்குலையவில்லை. அது ஊக்கமளிப்பதாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.  நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளிவிபர கழகம் ஏற்கனவே மதிப்பீடு செய்துள்ளது. எது எப்படி இருந்தாலும் நடப்பு நிதியாண்டின் முடிவில் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்திற்கு மேலாகத்தான் இருக்கும். எனவே 8.6 சதவீதம் என்ற கணிப்பை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நமக்கு கவலை அளிக்கும் அம்சமாக இருப்பதே பணவீக்கமும், வர்த்தக இடைவெளியும் தான் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: