முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் 60 ஆயிரம் பேருக்கு விருந்து

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.13 - மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் 60 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்படுகிறது. 16 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. பக்த சபை சார்பாக நடந்த பத்தாண்டுகாளக ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு வழங்கி வந்த திருக்கல்யாணவிருந்தை சென்ற ஆண்டு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி காவல்துறை ஆணையாளரின் அறிவுரைப்படி வடக்கு வெளி வீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. இந்த ஆண்டு வரும் 16 -ம் தேதி அன்று நடைபெறவுள்ள திருக்கல்யாண தினத்தில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வருகின்ற அனைத்து ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் திருக்கல்யாண விருந்தை சேதுபதி மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மையதானத்தில் சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்படுகிறது.

 விருந்தில் வாழைஇலை போட்டு பழங்கள் பச்சடி,பூந்தி, அப்பளம், பாயசாம், வாழைப்பழம், உருளைகிழங்குவருவல், கோஸ் பொறியல், பூசணிக்காய் கூட்டு, சாம்பார், ரசம், மோர் ஊறுகாயும் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாண விருந்துக்கு தேவையான அனைத்து காய்கறிகளை மதுரை பரவையில் உள்ள மொத்த காய்கறி வியாபாரிகளும், மட்டுத்தாவணி காய்கறி வியாபாரிகளும் சேர்ந்த ஒரு லாரி நிறைய காய்கறிகளையும், வாழை இலைகளையும் வழங்க உள்ளனர்.பழ வியாரிகள் சங்கம் பலவிதமான பழங்களை பெட்டி பெட்டியாக வழங்கப்பட உள்ளது. விருந்துக்கு தேவையான அரிசி, எங்கள்சபை உறுப்பினர்களும், நண்பர்களும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களும் வழங்க உள்ளனர்.   கீழமாசிவீதி, வியாபாரிகள் விருந்துக்கு தேவையான மளிகை பொருள்களையும், எண்ணெய், நெய் வியாபாரிகள் எண்ணெய்,நெய் டின்களையும் வழங்க உள்ளனர்.

வரும் 16 -ம் தேதி காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு நுழைவு அனுமதி சீட்டு வழங்கப்பட இருக்கிறது. ஊதா, மஞ்சள், ரோஸ் ஆகிய வண்ணங்களில் அனுமதி சீட்டு அச்சடிக்கப்பட்டு உள்ளது. மஞ்சள் அட்டை வைத்து இருப்பவர்கள் மேற்கு நுழைவு வாயில் வழியாகவும், ரோஸ் அட்டை வைத்து இருப்பவர்கள் கிழக்கு கோபுர வாசல் வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள். மொத்தம் 16 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும். இந்த தகவல் பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபையின் அறிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago