முக்கிய செய்திகள்

``தமிழ் புத்தாண்டு'' ஜெயலலிதா வாழ்த்து

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      தமிழகம்
Jaya3 0

 

சென்னை, ஏப்.14 - தமிழ் புத்தாண்டையொட்டி ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எனதருமை தமிழ் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் என் அகம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்ளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்வாதிகார குடும்ப ஆட்சியைத் தகர்த்தெறிந்து, புதிய வளர்ச்சியையும், மலர்ச்சியையும், விடுதலையையும் தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கும் வகையில், மக்களாட்சி மலரும் ஆண்டாக, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆண்டாக, இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக மாற்றும் ஆண்டாக, மாற்றங்களை மக்களுக்கு தரக்கூடிய ஆண்டாக இந்த புத்தாண்டு விளங்கட்டும்.

மலர இருக்கும் கர ஆண்டில் தமிழர் தம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இனிமையும், இன்பமும் கொழிக்க வேண்டும் என்ற என்னுடைய அவாவினை தெரிவித்து, தரணி வாழ் தமிழர்கள் அனைவரும் எனது உளமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உவகையுடன் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்: