முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.பி.சி தொலைக்காட்சி நிறுவன பொதுஇயக்குனர் ராஜினாமா

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

லண்டன், நவ. - 12 - பி.பி.சி தொலைக்காட்சி நிறுவனத்தின் பொது இயக்குனர் ஜார்ஜ் எண்ட்விஸ்டில் சர்ச்சையில் சிக்கி தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் அரசியல்வாதி ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுக்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்திருக்கிறார். லண்டனில் உள்ள பி.பி.சி. ஒளிபரப்பு நிலைய தலைமையகத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், 23 வருட அனுபவத்துடன் பி.பி.சி.யின் தயாரிப்பாளராகவும், தலைவராகவும் நான் நியமனம் செய்யப்பட்ட போது, எதிர்கால வாய்ப்புகளையும், சவால்களையும் கையாளக்கூடிய சரியான நபராக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனினும், கடந்த சில வாரங்களாக நிகழ்ந்த சம்பவங்கள் பி.பி.சி. நிறுவனம் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று நான் முடிவு எடுப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago