முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரம ரகசியமாக தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.22 - பரம ரகசியமான முறையில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் நேற்று புனே சிறையில் தூக்கிலிடப்பட்டான். கசாப் தூக்கிலிடப்படும்வரை அவன் தீவிரவாதி என்று அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு இருட்டில் வைக்கப்பட்டிருந்தான். 

மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப், பலத்த பாதுகாப்புள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த சிறை மத்திய மும்பையில் உள்ளது. இந்த சிறையில் உள்ள ஒரு அறையில் கசாப் அடைக்கப்பட்டிருந்தான். இந்த அறையை துப்பாக்கி குண்டுகளோ அல்லது வெடிகுண்டோ துளைக்க முடியாத அளவுக்கு சிறை அதிகாரிகள் அமைத்திருந்தனர். இந்தநிலையில் கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஆர்தர் சிறையில் இருந்து புனேயில் உள்ள எரவாடா சிறைக்கு கசாப் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டான். கசாப்புக்கு பாதுகாப்பாக கிரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரிகள், அதிரடிப்படை கமாண்டோக்கள், இந்திய-திபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் சென்றனர். எரவாடா சிறைக்கு கடந்த 19-ம் தேதி காலையில் கசாப்பை கொண்டு சென்றனர் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். எரவாடா சிறைக்கு கசாப் கொண்டு செல்லப்பட்டது அந்த சிறை சூப்பிரண்டுக்கு மட்டும்தான் தெரியும். துணை சிறை அதிகாரி, சிறை டாக்டர் மற்றும் இதர சிறை அதிகாரிகள், ஊழியர்கள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. பெரிய குற்றவாளி ஒருவர் சிறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் என்று மட்டும் சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தீவிரவாதி கசாப்தான் என்று யாருக்கும் தெரியாது. எரவாடா சிறையில் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் ஒரு முட்டை வடிவிலான அறையில் கசாப் அடைக்கப்பட்டான். கசாப் தூக்கிலிடப்படும் கடைசி நிமிடம் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அதிகாரிகளுக்குக்கூட அது பற்றி தெரிவிக்கப்படவில்லை. தூக்குத்தண்டனை பெற்ற தீவிரவாதி ஒருவன் என்று மட்டும்தான் தெரிவித்தோம். கசாப் தூக்கிலிடப் படுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்புதான் தீவிரவாதி கசாப் என்று கூறினோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்