கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி: காங்கிரஸ் . கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

சண்டிகர், நவ. - 26 - நாட்டில் ஏற்கனவே 1,453 கட்சிகள் உள்ளன. இப்போது மற்றுமொரு கட்சியாக கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டுள்ளது. எனினும் இது ஜனநாயகத்துக்கு நல்லதுதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சருமான மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார். இது குறித்து சண்டிகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ஏற்கனவே 1,453 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளன. இப்போது கூடுதலாக தொடங்கப்பட்டுள்ள கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த உதவும். கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது நல்லதுதான். காங்கிரஸ் தொடங்கப்பட்ட 1885 ம் ஆண்டில் இருந்து எங்களுடன்தான் இருந்து வருகின்றனர். இந்நாட்டு மக்களுக்கும், காங்கிரசுக்கும் இடையே உள்ள உறவை யாராலும் பறித்து விட முடியாது. ஆம் ஆத்மி என்ற சொல்லின் பொருளே காங்கிரஸ் என்பதன் அர்த்தம் என்பது போலத்தான் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: