முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடவடிக்கை எடுக்க தங்கபாலுக்கு அதிகாரம் இல்லை - கார்த்திக் சிதம்பரம்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தங்கபாலுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.

நேற்று சென்னையில் கார்த்திக் சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் தங்கபாலுக்கு கிடையாது. எந்த ஒரு முடிவையும் கட்சி தலைமைதான் முடிவு எடுக்க முடியும். தலைமைக்கு எதிராக தங்கபாலு செயல்பட்டுள்ளார். ஒருவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றால், சில நடைமுறைகள் உள்ளது. அதில் நீக்குபவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 

ஆனால் தங்கபாலு எந்த ஒரு நடைமுறையையும் பின்பற்ற வில்லை. அதனால் அவர் எடுத்த நடவடிக்கை செல்லாது. இந்த நடவடிக்கை குறித்து கட்சியின் மேலிடத்திற்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை வருகிற 13-ந்தேதிவரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன்பாக யூகங்களின் அடிப்படையில் எதையும் சொல்லமுடியாது. 

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கார்த்திக் சிதம்பரத்தை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் கவுன்சிலர்கள் செங்கை செல்லப்பன், சாந்தி, ஜேம்ஸ் பிரகாஷ், ஜெய்சேகர், பவன்குமார், கமல், விஜய் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்