முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் அமைச்சர் மாலிக் இந்தியா வருகிறார்

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.7 - இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விசா ஒப்பந்தம் தொடர்பாக   பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் இந்தியாவுக்கு வருவது இரண்டொரு நாள்கள் தள்ளிப்போகும் என்று செய்திகள் தெரிவித்தன. மாலிக் பிறந்த நாள் இம்மாதம் 12-ம்தேதி வருகிறது. இருப்பினும்  அவர் 14-ம்தேதிதான் இந்தியா வந்து, தாஜ்மஹாலில் ஒரு நாள் தங்குவார் . 11 முதல் 13-ம் தேதி வரை அவர் துருக்கி செல்ல உள்ளார்.

 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பாராளுமன்றத்தை டிசம்பர் 13-ம் தேதி தாக்கினர். எனவே மாலிக் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும், வெளியுறவு அமைச்சகத்திலும் கலந்து பேசி அவரது இந்திய பயணம் பற்றி முடிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்