முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா கூட்டம் - புதிய வரைவு நகல் சமர்ப்பிப்பு

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.17 - லோக்பால் மசோதாவிற்கான கமிட்டியின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது லோக்பால் மசோதாவுக்கான வரைவு நகலை கமிட்டியின் மக்கள் பிரதிநிதிகள் சமர்ப்பித்தனர். நாட்டில் ஊழலை அடியோடு ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவுக்கான விதிமுறைகளை உருவாக்க 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் மத்திய அரசு சார்பாக 5 பேரும் மக்கள் பிரதிநிதிகள் 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்த கமிட்டியின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கமிட்டியின் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கினார். கூட்டத்தின்போது மக்கள் பிரதிநிதிகள் சார்பாக மசோதாவின் வரைவு நகல் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையொட்டி வருகின்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

சுமார் 90 நிமிடம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சாந்தி பூஷணும் கலந்துகொண்டார். மக்கள் பிரதிநிதிகள் கோரியபடி கூட்டத்தில் நடந்த நடவடிக்கைகள் குறித்து ஆடியோ பதிவு செய்யப்பட்டது. வீடியோகிராப் எடுக்கப்படவில்லை. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், லோக்பால் மசோதாவை வருகின்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்  தாக்கல் செய்ய கமிட்டியில் உள்ள இரு தரப்பினர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவித்தார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் மாதம் நடக்கவுள்ளது. கமிட்டியின் அடுத்த கூட்டம் மே மாதம் 2-ம் தேதி நடைபெறும் என்றும் கபில் சிபல் தெரிவித்தார். லோக்பால் வரைவு மசோதாவுக்கான கருத்துக்களை இருதரப்பினரும் தெரிவித்தனர். மக்கள் பிரதிநிதிகள் சார்பாக அளித்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்றும் கபில் சிபல் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்